» துறவியல்

ஆசிரியர் : பொய்கையார்.
௪௰)

முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாலை
முப்பால் மயக்கேழ் பிறப்பாகி - எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளிஓரார் யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாயாப் போந்து

௪௰௧)

உண்மைமால் ஈர்த்து இருள்கடிந்து சார்ஐயம்
புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் - நுண்ணுணர்வான்
அண்ணா நிலைப்படுவர் ஆற்றல் விழுப்புலனை
எண்பொருட்கு ஊர்இயலைச் சார்ந்து

௪௰௨)

மாசகல வீறும் ஒளியன்ன நோன்புடையோர்
மூசா இயற்கை நிலன்உணர்வார் - ஆசகற்றி
இன்னல் இனிவாயாக் கொள்வார் பிறப்பிறப்பில்
துன்னார் அடையும் நிலன்

௪௰௩)

பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா
பேரா ஒருநிலனாம் நீங்காப் பெரும்பொருளை
ஏரா அறிந்துய்யும் போழ்து

௪௰௪)

மெய்யுணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்
பொய்யுணர்வாம் ஈண்டிய எல்லாம் ஒருங்கழியும்
ஐயுணர்வான் உய்ந்துஅறம் சார்பாச் சார்பொறுக்க
நையா நிலைவேண்டு வார்

௪௰௫)

ஒன்றுண்டே மற்றுடலில் பற்றி வினையிறுக்கும்
பொன்றா உணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத்
தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர்
நன்பால் அறிந்தார் துறந்தார் வரல்உய்ந்தார்
புன்பாலால் சுற்றப் படார்

Advertisement