» சொல் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.

எ.கா:

"உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்" - திருக்குறள (592)

இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்