» அன்மொழித் தொகை

இதுவரையிற் கூறிய தொகைகளில் அல்லாத சொற்கள் மறைந்துவருமாயின் அது அன்மொழித்தொகையாகும். மேலும் இவ்வன்மொழித்தொகை முன் சொன்ன ஐந்து தொகைகளில் ஒன்றாக இருக்கும்

(எ-கா)

"ஆயிழை வந்தாள்" - இதில் ஆயிழையென்பது காலங்காட்டாத வினைத்தொகை (ஆராய்ந்த இழை, ஆராய்கின்ற இழை, ஆராயும் இழை). ஆயின் இவ்விடத்தில் அந்த இழையணிந்த பெண்ணென்று பொருளாததால், இது வினைத்தொகைப் புறத்தெ பிறந்த அன்மொழித்தொகை எனப்படும். இவ்வாறே மற்ற தொகைகளின் புறத்தே இந்த அன்மொழித்தொகை அமைந்திருக்கும்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

"கோற்றொடியைக் கொன்று என் செய",
"ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
"வீமன் திருமகளாம் மெல்லியலை",
"ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
"தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
"விளங்கிழை தமியன் ஆனாள்",
"அஞ்சொல் இளவஞ்சி அடியெந்தோள் ஏறு"