» பண்புத்தொகை

பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும்

அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்.

பண்பாவன:
குணம்(நன்மை, தீமை),

உருவம்(வட்டம், சதுரம்),

நிறம்(நீலம், பசுமை),

எண்ணம்(ஒன்று, பத்து),

சுவை(துவர், காரம்).

பண்புத்தொகை:(எ-கா)
"பண்புத்தொகை" "சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:(எ-கா)
"கைத்தலம்" "பலாமரம்", "மடித்தலம்", "இந்தியநாடு", "விற்படை", "வெண்தயிர்", "ஒண்டொடி", "கருஞ்சிலை", "நாற்படை"