» வேற்றுமைத் தொகை

இரு சொற்களுக்கிடையே "ஐ", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்

எடுத்துக்காட்டு:-

1. முதலாம் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை

பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும்." எந்த [[உருபு|உருபும்] சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.

எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.

2. இரண்டாம் வேற்றுமை:
(எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.

3. மூன்றாம் வேற்றுமை:
(எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.

4. நான்காம் வேற்றுமை:
(எ-கா):நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.

5. ஐந்தாம் வேற்றுமை:
(எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன

6. ஆறாம் வேற்றுமை:
(எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
(எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது

7. ஏழாம் வேற்றுமை:
(எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன

Advertisement