» வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்

௧)

அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.

அந்த + பையன் = அந்தப்பையன்
இந்த + பெட்டி = இந்தப்பெட்டி

௨)

அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
எத்துணை + கொடுமை = எத்துணைக்கொடுமை

௩)

அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.

அவ்வகை + காடு = அவ்வகைக்காடு
இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு
எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்

௪)

மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.

மற்ற + கலைகள் = மற்றக்கலைகள்
மற்று + சிலை = மற்றுச்சிலை
மற்றை + பயன் = மற்றைப்பயன்

௫)

“இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.

மோர் + குடம் = மோர்க்குடம்
மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல்
தயிர் + பானை = தயிர்ப்பானை
தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி

௬)

"மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்" வரும் வல்லினம் மிகும்.

மரம் + பெட்டி = மரப்பெட்டி
இரும்பு + தூண் = இரும்புத் தூண்
தங்கம் + தாலி = தங்கத்தாலி

௭)

“நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.

குடை + கம்பி = குடைக்கம்பி
சட்டை + துணி = சட்டைத்துணி

௮)

“ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.

அடுப்பு + புகை = அடுப்புப்புகை
விழி + புனல் = விழிப்புனல்

௯)

“பண்புத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.

புது + குடம் = புதுக்குடம்
வட்டம் + பலகை = வட்டப்பலகை
பொய் + செய்தி = பொய்ச்செய்தி

௰)

‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்’ வல்லினம் மிகும்.

வேழம் + கரும்பு = வேழக்கரும்பு
தாமரை + பூ = தாமரைப்பூ
மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்

௰௧)

‘உவமைத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.

தாமரை + கண்ணன் = தாமரைக்கண்ணன்
பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
மலை + தோள் = மலைத்தோள்

௰௨)

“அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.

அரை + காணி = அரைக்காணி
அரை + படி = அரைப்படி
பாதி + பங்கு = பாதிப்பங்கு
அரை + தொட்டி = அரைத்தொட்டி
பாதி + செலவு = பாதிச்செலவு

௰௩)

‘முற்றிலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.
திரு + கோவில் = திருக்கோவில்
புது + பை = புதுப்பை
பொது + சாலை = பொதுச்சாலை

௰௪)

“தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.

வினா + குறி = வினாக்குறி
பலா + பழம் = பலாப்பழம்

௰௫)

‘ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்கப்’ பின்வரும் வல்லினம் மிகும்.

கருத்தாய் + கேட்டாள் = கருத்தாய்க்கேட்டாள்
அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச்சொன்னார்
போய் + பார் = போய்ப்பார்

௰௬)

முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

முன்னர் + கண்டோம் = முன்னர்க்கண்டோம்
பின்னர் + காண்போம் = பின்னர்க்காண்போம்
முன்னர் + செல்க = முன்னர்ச்செல்க
பின்னர் + பணிந்தார் = பின்னர்ப்பணிந்தார்

௰௭)

வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.

பட்டு + சேலை = பட்டுச்சேலை
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு

Advertisement