» தேங்காய் புணர்ச்சி

தேங்காய் - இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா ‘தெங்கு’ (தென்னை) என்பதாகும்.

தெங்கு + காய் = தேங்காய்

‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.

இதற்குரிய விதி,
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின்
என்பதாகும்.

"தனிக்குறில் முன் ஒற்று"

கண் + ஒளி = கண்ணொளி
பண் + ஓசை = பண்ணோசை
மண் + ஓசை = மண்ணோசை


இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும்.

(கண்ண்+ ஒளி = கண்ணொளி)

இதற்குரிய விதி,
"தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்"
என்பதாகும்

Advertisement