» பூப்பெயர்ப் புணர்ச்சி

பூ + கொடி = பூங்கொடி
பூ + சோலை = பூஞ்சோலை
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பூ + பாவை = பூம்பாவை

பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணரும்.

இதற்குரிய விதி,
"பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்" - (நன்னூல் நூற்பா - 200)

மென்மையும் - என்ற உம்மையால், அதே வல்லெழுத்து வந்து புணரும்.

(பூ + கொடி = பூங்கொடி ; பூ + கொடி = பூக்கொடி
பூ + கூடை = பூக்கூடை)

Advertisement