» பாக்களும், தளைகளும்

மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன.

ஆசிரியத்தளைகள் ஆசிரியப்பாவுக்கும், வெண்டளைகள் வெண்பாவுக்கும், கலித்தளைகள் கலிப்பாவுக்கும், வஞ்சித்தளைகள் வஞ்சிப்பாவுக்கும் சிறப்பாக உரியவை

Advertisement