» அழுகை

அழுகை என்பது அவலம். இழிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கின் வழி அழுகை தோன்றும்.
வௌ;வாய் ஓரி முழவாக..... மன்னர்க்கியல் வேந்தே. (சீவக.பா. 309)
அரசியாகிய விசயை சுடுகாட்டில் தன் மகனை ஈன்றெடுக்கின்றாள். அரண்மனையில் பிறக்க வேண்டிய தன் மகன் சுடுகாட்டில் பிறக்க நேர்ந்ததைக் குறித்து அவளுக்குத் தாங்கொணாத் துயரம் ஏற்படுகின்றது. நரியின் குரலே முழவாக் இறந்தாரை எரிக்கும் ஈமத்தீயே விளக்காக் சுடுகாடாகிய அரங்கிலே நிழல்போல் அசைந்து பேயாட் எப்பக்கமும் ஒலிக்கும் கோட்டானின் குரலே வாழ்த்துரையாக அமைய, இங்ஙனம் பிறப்பது தான் மன்னன் மகனாகிய உனக்கு இயல்போ? என்று புலம்புகிறாள். இப்பாடலில் வறுமை காரணமான அவலச்சுவை இடம்பெற்றுள்ளது; கற்பவர் நெஞ்சை உருகச் செய்கிறது.