» இளிவரல்

மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த விளிவரல் நான்கே (தொல். பொருள். மெய். நூ.254)
இளிவரல் என்பது பிறரால் இகழப்படுவது. மூப்பு என்பது முதுமை கண்டு இழித்தல், பிணி என்பது பிணியுறவு கண்டு இழித்தல், வருத்தம் என்பது தன்னிடத்தும் பிறரிடத்தும் உள்ளதாகிய வருத்தத்தால் இழிப்பு தோன்றல், மென்மை என்பது நல்குரவு. (வறுமை)
மூப்பு காரணமாகத் தோன்றும் இளிவரல் (இழிபு) சுவையைத் திருத்தக்கத் தேவர் நயம்படக் காட்டியுள்ளார்.
"இன்கனி கவரும் மந்தி... கண்ட தொத்தே" (சீவக. பா. 2725)
கடுவன் ஒன்று தன் மந்திக்குப் பலாச்சுளையை அன்புடன் கொடுக்கும் காட்சியையும், அச்சுளையை மந்தி வாங்கும் போது காவல்காரன் பலாச்சுளையைப் பறித்துக் கொண்டு இரண்டையும் விரட்டி விட்ட காட்சியையும் சீவகன் கண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான். அன்புடை மனைவியரிடம் பெறும் இன்பம் தோட்டக்காரன் பெறும் இன்பத்தைப்போல் நிலையில்லாதது எனவும் உடலோடு தோன்றிய காமத்தையும் இனிவரவிருக்கும் இழிவைத் தரும் முதுமையையும் வெறுத்தலே தக்கது என்றும் கருதினான். இப்பாடல், இளிவரல் சுவை அமைந்த பாடல்

Advertisement