» உவகை

உவகையாவது காமம் அல்லது மகிழ்ச்சி. செல்வம், அறிவுடைமை, புணர்ச்சி, விளையாட்டு என்ற இவை பற்றி உவகைச் சுவை தோன்றும். செல்வம் என்பது நுகர்ச்சி, புலன் என்பது கல்விப் பயனாகிய அறிவுடைமை. புணர்ச்சி, காமப்புணர்ச்சி முதலாயின் விளையாட்டென்பது, யாறுங்குளனுங்காவுமாடிப் பதியிகந்து வருதல், முதலாயின என்பர் பேராசிரியர். உவகை என்பது மகிழ்ச்சியினைக் குறிக்கும்.
"ஒற்றரும் உணர்த லின்றி ........ தொழுகிற் றன்றே" (சீவக. பா. 2096)
சீவகன் வாயினால் ஒன்றும் கூறாமல் (ஒற்றர்கள் உணரா வண்ணம்) உறுப்பின் குறிப்பினாலேயே உறவினர்க் கெல்லாம் தன் வருகையைத் தெரிவிக்க, அவர்கள் எல்லாரும் ஒரு சேரத் திரண்டு தழுவிக் கொண்டு நம்பி நம்பி என்று கூறி அழுத, ஆனந்தக் கண்ணீர் காலை இழுத்து ஓடியது. இது மகிழ்ச்சியிற் தோன்றிய உவகையாகும்.

Advertisement