» சமநிலை

சமநிலை என்பது நடுவு நிலைமையாகும். இதற்கு சாந்தச் சுவையைக் காட்டாகக் கூறலாம். ஐம்பொறிகளையும் அடக்கி, பிறர்வாழ்த்தினும், வையினும், தாளில் வணங்கினும், வாளில் வெட்டனும் மனம் மாறுபடாது அவற்றைச் சமமாக ஏற்றுக் கொள்ளல்.
"ஆங்கவை, ஒரு பாலாக வொருபாலா உடைமை இன்புறல் நடுவு நிலையருளல்...." (தொ.பொ.மெய்.நூ. 260)
இந்நூற்பாவில் தொல்காப்பியர் நடுவு நிலை பற்றிக் குறிப்பிடுகிறார். ஒரு மருங்கும் ஓடாது நிகழும் மன நிகழ்ச்சி நடுவு நிலை எனக் குறிப்பிடுவார் இளம்பூரணர். சமநிலையை முத்தியிலம்பகம் வழி அறியலாம்.
முடிவுரை
பல்வகைச் சுவையைப் பாங்காகத் தரும் வண்ணம், சிந்தாமணி காப்பியம் அமைவதால்தான் அதனை இலக்கியச்சோலை எனவும், காவிய அரங்கு எனவும் மொழிகின்றோம்.