» பெருமிதம்

பெருமிதம் என்பது வீரம், கல்வி, தறுகண், இசைமை, கொடை என்னும் நான்கு பொருள் பற்றி தோன்றும். கல்வி என்பது தவமுதலாகியவிச்சை. தறுகண் என்பது அஞ்சத் தக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமை என்பது புகழெனின் உயிருங் கொடுத்தல்; பழியெனின் உலகுடனும் வரினும் கொள்ளாது நிற்றல். கொடை என்பது உயிர், உடம்பு, உறுப்பு முதலிய எல்லாவற்றையும் கொடுத்தல்.
"ஒன்றாயினும் பலவாயினும்... இரியச் சினவேலோன்” (சீவக. பா. 2262) போர்க்களத்தில் விபுலனின் வீரத்தைப் பற்றிக் கூறும்போது அவ்வீரனின் பெருமிதத்தைக் காண்கிறோம்.

Advertisement