» மருட்கை

மருட்கை என்னும் சுவை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் காரணங்களால் தோன்றும்.
இது காறும் காணாத ஒன்றைக் காணுதல் புதுமை, அளவிறந்த ஒன்றைக் காணுதல் பெருமை. மிக நுண்ணியன காணுதல் சிறுமை. ஒன்றன் பரிணாமம் காணுதல் ஆக்கம். இக்காரணங்களால் மருட்கை தோன்றும்.
செம்மலர் அடியும் நோக்கித்......... தேவி என்றான் (சீவக. பா. 739)
சீவகன் காந்தருவதத்தையின் அழகினை நோக்கி மலர் போன்ற கண்களை உடைய இவள், தாமரை மலரில் வாழும் திருமகளே என்றெண்ணினான். புதுமை காரணமாக தோன்றிய எண்ணம் இதுவாகும்

Advertisement