» ககர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௰௪)

கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

௰௫)

காவல்தானே பாவையர்க்கு அழகு

௰௬)

கிட்டாதாயின் வெட்டென மற

௰௭)

கீழோர் ஆயினும் தாழ உரை

௰௮)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

௰௯)

கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்

௨௰)

கெடுவது செய்யின் விடுவது கருமம்

௨௰௧)

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

௨௰௨)

கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

௨௰௩)

கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

௨௰௪)

கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

௨௰௫)

கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை