» சகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௨௰௬)

சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை

௨௰௭)

சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு

௨௰௮)

சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

௨௰௯)

சீரைத் தேடின் ஏரைத் தேடு

௩௰)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

௩௰௧)

சூதும் வாதும் வேதனை செய்யும்

௩௰௨)

செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்

௩௰௩)

சேமம் புகினும் யாமத்து உறங்கு

௩௰௪)

சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

௩௰௫)

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

௩௰௬)

சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்