» நகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௪௰௮)

நல்லிணக்கம் அல்லல் படுத்தும்

௪௰௯)

நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை

௫௰)

நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

௫௰௧)

நீரகம் பொருந்திய ஊரகத்து இரு

௫௰௨)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

௫௰௩)

நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு

௫௰௪)

நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

௫௰௫)

நேரா நோன்பு சீராகாது

௫௰௬)

நைபவர் எனினும் நொய்ய உரையேல்

௫௰௭)

நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

௫௰௮)

நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை