» வகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௮௰௧)

வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்

௮௰௨)

வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

௮௰௩)

விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

௮௰௪)

வீரன் கேண்மை கூரம்பு ஆகும்

௮௰௫)

உரவோர் என்கை இரவாது இருத்தல்

௮௰௬)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

௮௰௭)

வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

௮௰௮)

வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை

௮௰௯)

வைகல் தோறும் தெய்வம் தொழு

௯௰)

ஒத்த இடத்து நித்திரை கொள்

௯௰௧)

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்