» சமதர்மம்

ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்.
௰௯)

‘ஏழை ஏழையாகவே இருப்பது, அவன்தலையெழுத்து’ என்று இந்து மதம் சொல்கிறதா?

ஏழை முயற்சி செய்து முன்னுக்கு வரக்கூடாதென்று இந்துமதம் தடுக்கிறதா?

‘பணக்காரன் தேவைக்கு மேல் சொத்து வைத்திருப்பதை இந்து மதம் அனுமதிக்கிறாதா?

இல்லை!

தர்ம்ம் சரியாக விநியோக்கப்படவேண்டும் என்பதே இந்து மத்த்தின் சாரம்.

கடந்த நூற்றாண்டுகளில் பணக்கார்ர்களாக இருந்தவர்கள், தங்கள் சுயநலத்துக்கக ஏழ்மையைத் தலைவிதி’ என்றார்கள்.
ஆனால், ஏழையின் அளவைப் பணக்கார்ர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஏழ்மை என்பது நிரந்தரமாக இருக்குமானால், அது இறைவன் விதித விதியாக இருக்கலாம்.

எப்போது ஏழையும் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறதோ, அப்போது அந்த வாய்ப்புகள் தடுக்கப்ட்டவன் தான் ஏழையாக இருக்கிறான் என்று அர்த்தம்.

‘பேரசைக்கார்ர்களை மோட்சத்துக்குப் போவதில்லை’ என்று இந்து மதம் கூறுகிறது.

ஒருவனது அறிவை இறைவன் நிர்ணயிக்கலாம்; ஆனால்பொருளை அவன் நிர்ணயிப்பதில்லை.

‘ஏழ்மை என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது அல்ல’ என்று இந்துமதம் அறுதியிட்டுக்கூறுகிறது.

அந்தக்கால உபன்யாசகர்கள் இதுபற்றி என்ன சொன்னார்களோ, எனக்குத் தெரியாது.

ஆனால், இந்தக் காலத்தில், இந்துமத்தத்துவங்களை லௌகீக வாழ்க்கை உகந்த வகையில் விமர்சிக்கும் காஞ்சி ஆசார்ய சுவாமிகளே, அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தெளிவான சமதர்ம்மே இந்து மத்த்தின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

பொருளாதார சமதர்மத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவர்களது கருத்தை, அவர்களது வார்த்தைகளிலேயே அப்படியே தருகிறேன்.

இது துறவியின் பேச்சு என்று அப்போது படிக்காமல் இருந்தவர்க், இப்போது படியுங்கள்.

அவர்கள் சொல்கிறார்கள்;

“ஸாயா தோயம் வஸநம் அஸநம்”

ஸாயா என்றால் நிழல்: தோயம் என்றது ஜலம்; வஸநயம் என்பது உடுத்திக்கொள்கிற வஸ்திரம்; அஸநம் என்றால் ஆகாரம்.

மனுஈர்களுடைய மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள, இந்த நான்கும் மிகவும் அவசியமானவை. நிழல் கொடுப்பு இந்தப்பூமிதான். பூமியிலிருந்த மண், கல், சுண்ணாம்பு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு வீடு கட்டிக்கொள்கிறோம். பூமியிருருந்து ஊலம் வருகிறது. ஆகாரம், பூமியிலிருந்துதான் கிடைக்கிறது. வஸ்திரமும் பூமியிலிருந்து வரும்படியான பருத்தியினால்தான் கிடைக்கிறது. முடிந்த முடிவில், நாம் ‘பூமி’யில்தான் மறைந்து போகிறோம் நமக்குத்தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது. என்றாலும், ‘பூமி’யில் தான் மறைந்து போகிறோம். நமக்குத் தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது என்றாலும்
‘பூமி’யிலிருந்து கிடைக்கும்படியான பொருள்களில், நமக்கு மிகவும் குறைச்சலாக எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் மானத்தைக் காப்பாற்க்க்கொள்ள ஆடை கட்டிக்கொள்ள வேண்டும். நமக்கு ஒரு வருஷத்திற்குக் குறைந்தது எவ்வளவு ஆடை வேண்டமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில்தான் நாம் கவனம் செலுத்துவதில்லை.

ஆடை எதற்கு? மானத்தைக்காத்துக் கொள்வதற்காக, அதற்கு நல்ல கெட்டித் துணியாக,பருத்தி ஆடையாக இருந்தால் போதும். பகட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டால், மற்றவர்கள் கௌரவமாக நினைப்பார்கள் என்ற தப்பாக எண்ணிக் கொண்டு, அவ்வாறு செய்கிறோம். அதனால் மானத்தையும் மறைபதா நினைகமுடியாது. ‘பாருடா எவ்வளவுஇறுமாப்பு’ என்றாதான் பார்கிறவர்களுக்குத்தோன்றும். இந்த விஈயத்தில் குடம்பம் செலவழிக்கிற பணத்தைக்கணக்கெடுத்தால், அந்த் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மானத்தைக்காத்துக்கள்ளத் தேவைப்படும் திணி போக, பாக்கியை வைத்துக்கொண்டு, ஐந்து குடும்பங்களுக்கு வேண்டிய துணியைக்கூட சப்ளைபண்ணலாம்.

இரண்டாவது, பட்டுப்புடவை என்று வாங்குகிறார்களே தவிர அதனால் பாவம்நிறைய வருகிறது. பட்டுப்புடவனை, படு வேஷ்டி இவற்றால் எதனை ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்படுகிறது? செலவு அதில் அபாரமாக ஆகிறது. அஹிம்சை அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு மாமிசமே சாப்பிடுவது இல்லை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தல், நமக்கு இந்தப் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி இவற்றினால் வருகிற பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குக் கூட வராது. ஓர் ஆடோ இரண்டு ஆடோ அங்கே உயிரை இழக்கின்றன என்றால், இங்கே கணக்கு வழக்கு இல்லாத ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்பட்டு வருகிறது. கூடிய வரைக்கும் நாம் உடுத்திக்கொள்கிற வஸ்திரம் ஹிம்சை இல்லாத வஸ்திரமாக இருக்க வேண்டும். கெட்டியான வஸ்திரமாகவும், சாதாரண ஜனங்கள் எல்லாம் உடுத்திக்கொள்ளும்படியானதாகவும் இருக்க வேண்டும்.

மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தார் அயேக திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும் தரித்திரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்வது என்றால் ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது, நான்கு வேளையாக வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக்கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக்கொள்ளவ ஏண்டும் என்கிற அபிப்ராயம் வளர்ந்தால், அதுபெரிநய தப்பு. வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகள் நாளுக்குநாள் மனுஷர்களுக்கு அதிகமாகிக் கொண்டே போனால், நாட்டில்தரித்திரந்தான் மிஞ்சும்.

மனுஷ்யர்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள மிகமிக அத்தியாவசியமானவை எவையோ அவை நாட்டில் உள்ள அத்தனை ஜனங்களுக்கும் கினைக்க வேணுட்ம். அதற்குத்தான் திட்ட ஒழுங்கு எல்லாம் வேண்டும். அப்படி வாழவேண்டுமானால், வசதி உள்ளவர்களை கூட, நாட்டில் இருக்கும்படியான பரம ஏழை எப்படி வசிக்கிறோனோ அப்படி வசிக்கப் பிரய்த்தனம் பண்ண வேண்டும். சௌகர்யம் இருக்கிறவர்களும்கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது என்று தேவைக்குமேல் அதிகமான வசதிகளைப்பெருக்கிக் கொள்ள முடியாமல் இருக்கவேண்டும்.

வசதி இருக்கிறது என்று இவர்கள் பண்ணுகிற காரியங்கள் எல்லாம், அபரிக்ரகம் என்பதற்கு விரோதம்தான். இந்த் தோஷம் வந்துவிட்டால் ஈசுவரானுக்ரகம் கிடையாது. மனுஷ்ய ஜன்ம்ம், பிரயோஊன் உள்ளதாக ஆக வேண்டுமானால், நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மேல் ஓர் இம்மிகூட விரும்பக்கூடாது. வசதி இருக்கிறது என்றல் அதைக்கொண்டு கஷ்டப்படுகிற இதர குடும்பங்களுக்கு - அந்தக் குறைச்சலான வசதியைக்கூடப் பெற முடியாதவர்களுக்கு - உதவி செய்வதுதான் புண்ணியம். இதுதான் அவனுக்கு மோஷத்தை அளிக்கும்.

இது தெரியாம், வசதி இருக்கிறவர்கள், தேவைக்குமேல் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என்கிற தோஷத்தை அதிகமாக இப்போது பண்ணிக்கொண்டிருக்கிறது, ஒரு பக்கம்; அந்தச்சமயம் இவர்களைப் பார்த்து வசதி இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியாவது அவற்றை வாங்க வேண்டும் என்று கடனாளியாகி அநேக உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பட்டுப்புடவையைப் போலத்தான் வைர ஆபரணங்களி உள்ள ஆசை. இதில் போடுகிற பணம் வீண். ‘கந்யாம் கநக ஸம்பந்தாம்’ என்று பெண்ணைக் கொடுக்கும்போது ஸ்வர்ணம் கொடுப்பது என்கிற வழக்கம் இருந்திருக்கிறது. தங்கத்தில் போடுகிற பணமாது பிரயோஜனப்படுகிறது. வைரத்தில் பிரயோஜனம் இல்லை. உபத்திரவம் இருக்கிறது.

ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எல்லாம் யர்ரும் காப்பி சாப்பிட்டது இல்லை. குடிசையில்தான் இருந்தார்கள். காதில் பனை ஓலை போட்டுக்கொண்டிருந்தார்கள். கேழ்வரகுக் கூழோ கஞ்சியோதான் சாப்பிட்டார்கள். ஏழைகளோ, பணக்கார்ர்களோ எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள். நாம் பட்டுத்துணி உடுப்பது இல்லை. காப்பி குடிப்பது இலை என்று சங்கல்பம் செய்துகொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக் கொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக்கொண்டு, ஐந்து குடும்பங்கக் வாழ முடியும். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி ஏற்படாது. சௌக்கியம் ஏற்படாது. தரித்திரம், துக்கம் எல்லாந்தான் உண்டாகும்.

பட்டுப் புடவையில் காசு போடவில்லை என்றால், எல்லாக் குடும்பங்ககளும் முன்னுக்கு வந்துவிடும். குடும்ப சௌகரியத்திற்காக மட்டும் சொல்லவில்லை. பட்டுப் புடவையினால் வருகிற பாவங்கள் நமக்கு இல்லை என்றால், மோக்ஷத்திற்குச் சிரமங்களே இல்லாமல் போகும். அஷ்தாங்க யோகத்தன்மதல் அங்கமே அஹிம்சை,அபரிக்ரகம் -இவை எல்லாம்தான். ஒருபிராணிக்குக் கூட நம்மால் ஹிம்சை உண்டாக்க் கூடாது. நம்முடைய தேவைக்கு மேல் ஒரு துரும்பைக்கூட, வசதி இருக்கிறது. பணம் இருக்கிறது. என்பதற்காக வாங்கிக்கொள்ளக்கூடாது. பணம் இருக்கிறது என்றால், இன்னும் சில குடும்பங்களுக்கு உதவி செய்யலாம். இப்படிச் செய்தால்தான் செய்வதற்குப் பிரயத்தனமவது செய்தால்தான் சீக்கிரத்திலே ப்ரம்ம சாட்சாத் காரத்தைப் பெற முடியும். அஷ்டாங்க யோகத்தின் முதல் படியே இதுதான். முதல் படியை மிதிக்காமல் மேல்படிக்குப் போக முடியாது. என்பதற்காக இதைச் சொன்னேன்

Advertisement