» தூய மனம்

ஆசிரியர் : நாதகுத்தனார்.
௧)

வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்

௨)

போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல்
கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்
சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல்
வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்

ஐம்பெருங் காப்பியங்கள்

Advertisement