» பல நிலைகளைக் கடக்கும் சரீரம்

ஆசிரியர் : நாதகுத்தனார்.
௭)

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!

ஐம்பெருங் காப்பியங்கள்