» சிலையும் சென்பகமலரும்

ஆசிரியர் : சாண்டில்யன்.

வராகமலையிலிருந்து வெகு வோகமாக விடுவிடு இறங்கி வந்து வஞ்சிமாநகரை அனைத்தும் சூழ்ந்தும், அம் மாநகரின் வலிய கோட்டையை இடித்து விடுவதுபோலதனது பேரலைகளால் தாக்கியும், கலைகதிரவன் கிரகணங்களால் பளபளத்து மின்னியும், தனது ஆற்றலையும் அழகையும் ஒருங்கே இணைத்து காட்டி,ஒருமுரட்டு ஆரணங்கைப்போல் காட்சியளித்த ஆமிரவதியின் அற்புதஎழிலையும் செயலையும் கண்ட இதயகுமரன், நேரம் போவது தெரியாமல் தனது கருமை நிறப்புரவியில் சிலையென உட்கார்ந்திருந்தான். பாயுமிடமெல்லாம் கரைநெடுக ஆமிரம் என அழைக்கப்படும் மாமரக் காடுகளை நிரம்ப உடையதல்ஆமிராநதி எனறுவடமொழியிலும், ஆண்பொருநைஎன்று தமிழ் மொழியிலும் சிறப்பு பெயர்களை பெற்றதும் , கர்ப்பபுரி என்று வடமொழியியில் அழைக்கப்பட்ட வஞ்சிமாநகரைஅனைத்துக் கொண்டதால் சூதநதிஎன்றொரு இன்னெரு பெயரை பிங்கலநிகண்டுவல் வழ்ங்கப்பெற்றதும், அதனாலே கருவூர் (கரு-கர்ப்பம்-ஊர்) வஞ்சிக்கும்தனக்கும்உள்ள ஒற்றுமையை விளக்கிதுமான சூதநதியான ஆண்பொருநை அன்று காலையில் இதயகுமரன் இதயத்தில் பழம் பெருமைகள் பலவற்றை கிளப்பிவிடதால்,அவன் கண்களும் அந்தநதியின் அலைகளை விட அதிகமாக பளபளத்தான.

"இத்தகைய நதிகள் பய்ந்தாலேயே தமிழகம் சீரும்,சிறப்பும் வளமும் பெற்றிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் கவிகள் பலரும் தங்கள் பெரும்காவியங்களைஆற்றுப்படலத்தைமுதன்மையாக வைத்து துவங்கினார்கள் போலும் " என்று சிறிது கவிய உணர்ச்சியிலும் இரங்கிய இதயகுமரன் , அந்த மகாதியின் அப்புர்மிருந் கோட்டையையும் கோட்டைக்கும்அடுத்துத்தெரிந்த மாளிகைகளுக்குமிடையே இருந்த் அடர்த்தியான காட்டையும் நேக்கினான் சில வினாடிகள். காடு மிகஅடர்த்தியாக வைக்கப்பட்டிருந்த்தற்குக் காரணம், எதிரிகள் கோட்டை வாயிலைத் தாண்டினாலும் காட்டுக்குள் ஆயுத் வண்டிகள் வர முடியாதபடி தடுப்பதற்கே என்பதை புரிந்து கொண்ட இதயகுமரன், ஆற்றைத் தாண்டுவதும் அத்தனை சுலபமல்ல என்பதை உணர்ந்து கொண்டான். ஆற்றின் ஒரு பகுதி கற்களை கொண்டு சுற்று வட்டமாக மறைத்திருந்ததன் விளைவாகா ஏற்பட அகழியிலிருந்து பெரும் முதலைகள் தரையில் ஊர்ந்து கோட்டைச் சுவர்களை அடுத்து படுத்திருந்த்த்தையும், அவை அசைந்தபோதெல்லாம் கோட்டைச்சுவர் மீதிருந்த பட்சி ஜாலங்கள் திடிரென்று பறக்க துவங்கி விட்டதையும் கண்ட அந்த வாலிபன், பயங்கரத்திலும் அழகு கலந்து கொண்டு ”அதோ இருக்கும் கோட்டைக்கழுகுகள் வெயில் புறப்பட்ட பிறகும் அடக்கமாய் உக்கர்ந்திருப்பதை நம்ப முடியாது” என்று நினைத்ததால் தத்துவத்துடன் மகிழ்ச்சியையும் இணைத்து கொண்டான். இப்படிஅவன் நினைத்தசமயத்தில் கோட்டைமதிலிருந்து கிளம்பி ஜிவ்வென்று சக்கர வட்டமாய்பறந்து, அம்புபோல் அமராவதியின் ஜலமட்டத்தில் இறங்கி ஒரு பெரிய மீனை கொத்திக்கொண்டு போய்விட்ட கழுகுகொன்றும் அவன்கண்களில் படவே, அத்கப்படியான அடக்கங்ககூட ஒரு விசயத்தில் ஆபத்துதான் என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

இப்படி ஆண்பொருநையின் சிறப்பை பார்த்துப்பார்த்து பலபடி மகிழ்ந்துகொண்டு நின்ற இதயகுமரன் சற்று ஏறெடுத்து கோட்டைக்குஅப்பால் எழுந்துநின்ற அரச மாளிகையின் விதானங்க்களையும் பார்த்தான். விதானங்கள் இரண்டு ஆகாயத்தைஅளாவி நின்றிருந்தாலும் இரண்டிலும் சேரமான் கொடி பறந்து கொண்டிருந்தாலும் எது மன்னன அரண்மனையிருக்கும் என்பதை நிர்ணயிக்கமுடியாத்தால், கவலரையே விசாரித்து விடுவோம் என்று தீர்மானித்துகொண்டே அந்த வாலிப வீரன் தனது புரவியை ஆற்றின் இரு கரைகளையும் இணைத்த பாலத்தை நோக்கி செலுத்தினான் மெதுவாக. அந்த சமயத்தில் கூட “தண்பொருநை புனற்பாயும், வின்பொருபுகழ் விறல் வஞ்சி” என்ற புறநானுற்றுப்பாடல் அம் மாநகரத்தைச்சிறப்பித்த அழகையும்,” வருபுனல் வாயில் வஞ்சி’ என்ற சிறுபாணற்றுப்படை வழங்கிய சிறப்பையும் எண்ணி பார்த்துகொண்டுவந்த்த இதயகுமரனை, கோட்டைவாயிற்காவலர் இருவர் சிறிது நிறுத்தி, “நீ எந்த ஊர்? யாரைப்பார்க்கவேண்டும்?” என்று விசாரித்தனர்.
இதயகுமரனின் கண்கள் அவ்இருவரையும் ஒரு விநாடி ஏறஎறங்க பார்த்தன.அவன் இதழ்களில் இளநகை கூட்டின. அப்பர்வையை அடுத்து,”சோழ
நாட்டவன், இந்த ஊரைபார்க்க வந்தேன்,சேரார்நாட்டில் விருந்தோம்பல்தான் அதிகமே தவிர தடைஏதும் கிடையாதென்று கேள்விப்பட்டேன்’ என்று பதில் கூறினான் இதயகுமரன், இதழ்களில் படரவிட்ட இளநகையை அடுத்து.

இந்தபதிலை கேட்ட அந்த வீரரும் ஒரு வினாடி மலைத்தனர்.பிறகு அவர்களில்ஒருவன்கேட்டான், “அப்படியானால் நீ நாடோடியா?” என்று, இந்த கேள்வி இதயகுமரனை லேசாக நகைக்க வைத்தது. ”யாத்திரீகர்களுக்கு அப்படியொரு பெயர் தருவதாக இருந்தால் நான் நாடோடிதான்” என்றன் இதயகுமரன் நகைப்பின் ஊடே.

அவன் எளனச்சிரிப்பும் பதிலும் காவலனின் சினத்தைக் கிளறிவிடவே, “உன்னை பார்த்தல் யாத்திரீகனாகத் தெரியவில்லை”
என்று கூறினான் உஷ்ணம் குரலில் ஒழிக்க.
“வேறு எப்படித் தெரிகிறது?”விஷமம் துளிர்த்தது இதயகுமரன் கேள்வியில்.

“போர்வீரனாகத் தெரிகிறது” என்றன் இன்னொரு காவலன், இதயகுமரன் இடையிலிருந்த நீண்ட வாளைச்சுட்டிக்காட்டி.

இதயகுமரன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. இடது கையால் புரவியின் சேனைத்தைப் பிடித்தவண்ணம் வலது கையால் முகவாய்க் கட்டையைத் தடவிக்கொண்டன் ஒரு விநாடி. “உங்களிடம் அதை எதிர் பார்த்துப் பயனில்லை” என்றன்முகத்தில் சிறிது ஏமாற்றத்தைப் படரவிட்டு.

“எதை?” காவலான் ஒருவன் வினவினான்.
“சரித்திர அறிவை.” இதயகுமரன் பதிலில் இனம்புரியாத ஒலியாயிருந்தது.
“சரித்திரஅறிவுக்கும் நீ யாத்திரை வந்தத்ற்கும் என்ன சம்பந்தம்?” என்ற காவலனின் சினம் அதிகப்பட்டது.
“போர்வீரன் யாத்திரீகனாயிருக்க முடியாதென்றாய். அனால் உங்கள் மாமன்ன்ர் இமயவரம்பன் கங்கை யாத்திரை செய்திருக்கிறார்.அவரும் போர்வீரனாகத்தான் இருந்திருக்கவேண்டும். அல்லது உங்கள் விளக்கப்படி ...........” சொற்களை முடிக்கவில்லை இதயகுமரன், சேணத்தை சிறிது இழுத்தான், புரவி
அம்பு போல் பாய்ந்துவிட்டது கோட்டைக்குள்.

“பிடி அவனை பிடி” என்ற குரல்கள் கோட்டைவாயிலில் எழுந்தன. புரவிகள் பலவும் இதயகுமரனைத்தெடர்ந்து பாய்ந்து சென்றன. அனால் இதயகுமரன் அடுத்தகணத்தில் கோட்டைக்கும் ஊருக்கும் இடையிலிருந்த பெருங்கட்டில் மறைந்துவிட்டதனாலும், அவன்புறமாக சென்றான் என்பது தெரியவில்லை யாதலாலும் சேரமன்னன் வீரர்கள் காட்டின் பல பகுதிக்குள் நுழைந்து சல்லடை போட்டு அரிக்கதொடங்கினார்கள்.

புரவியைக் கண்ணிமைப்பதற்குள் பறக்கவிட்ட இதயகுமரன் காட்டின் கிழக்குப் பகுதியில் புகுந்து மேற்குப் புறமாகத் திரும்பி கோட்டை சுவரின் வேறோர் பகுதிக்கு வந்தான். ஏதிரே கோட்டை மதில்மீது காவல் புரிந்த வீரரையும், விற்கூடங்களையும் கொண்ட ஸ்துபிகளையும் பார்த்து மகிழ்ச்சி கொண்டு மீண்டும் ஊரின் வடபுறத்துக்கு வந்து சற்று எதிரே தெரிந்த பெரும் கோயிலை கண்டான். கோயில் விதானத்தை கண்டதும்வெளியே தெரிந்த இரு விதானங்களில் அதுவும் ஒன்றுஎன்பதை புரிந்துகொண்டதோடு, அதன் பொன்மயமான விளிம்புகளை கண்டு பெருவியப்பு கொண்டான். ”சிவபக்தனான சேரமன்னன் இந்த பெருமாள் கோயிலுக்கு எதற்காக பொன் வேந்தன்” என்று தன்னை தானேகேட்டுக்கொண்டு “தமிழ் மன்னர்களிடத்தில் குறுகிய நோக்கு கொண்டவர்கள் சிலரே தவிர பெரும்பாலும் சமய சமரசம் உடையவர்களே” என்று சமாதனம் சொல்லிக்கொண்டு அதனால் பெருமையும் அடைந்தான். இப்படி பெருமை உள்ளத்தில் துள்ள புரவியிலிருந்து கிழே குதித்து அதன் முதுகில் சேனத்தை எறிந்தது விட்டு கோவிலை நோக்கி நடந்தான். புரவியும் அவனை தொடர்ந்தது. கோவில்முன்வாசலில் நுளைந்து பிராகாசத்தில் பிரதட்சனமாய் சென்ற இதயகுமரன் ஒருமுறை பின்னல் திரும்பி புரவியை நோக்கி “விஜயா| நீயும் பெருமாளை சேவிக்க வேன்டுமா ?” என்று கேட்டான். “ஆமாம்” என்பதற்கு அறிகுறியாக விஜயன் தலையசைக்கவே ,”நான் இவ்வூர் வந்தது பெருமாளைச் சேவிக்க அல்லவே” என்றன்.

“இல்லை “என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தது அந்தகருமை நிற புரவி.
இப்படி அந்த வாலிபன் புரவியுடன் பேசிக்கொண்டு நின்றதைக் வியப்படடைந்த மக்கள் பலர் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்ததால் இதயகுமரன் மேலே நடக்க ஆரம்பித்தான். புரவி பின்தெடர ஒருமுறை கோவிலை பிரதட்சணம் செய்தவன் உள்ளே சென்று அங்கிருந் அரங்க பெருமானைச் சேவித்தான். அன்று பெருமானுக்கு அலங்காரம் பலமாயிருந்த்தால் கண்கள் அரங்கன் கம்பீர முகத்திலும் அருள் தரும் திவடிகளிலும் மாறிமாறி நிலைக்கவைத்தான். அந்த சமயத்தில் கற்பூர தட்டேந்தி வந்த அர்ச்சகர் அர்ச்சனை புஷ்ப பிரசாத்தைப் பலருக்கும் கொடுத்து வந்த சமயத்தில் ஒருதனி சென்பகப்பூ இதயகுமரன் கையில் விழவே பிரமை பிடித்து நின்றார். “அப்பா இதை தவறி எடுத்து வந்துவிட்டேன். திருப்பிகொடுத்துவிடு. வேறு பிரசாதம் தருகிறேன்” என்று கேட்டார். அவர் குரலில் அச்சம் ஒலித்தது.

அந்த சென்பக மலரைக்கண்ணில் ஒற்றிக்கொண்ட “இந்த மலருக்கென்ன அத்தனை சிறப்பு ?” என்று வினவினான்.

இது அரண்மனை தோட்டத்திலிருந்து வருகிறது. அரசகுமாரிக்காக ஏற்பட்டது. தயை செய்து திருப்பி கொடுத்துவிடு” என்று மண்டடினார் பட்டர்.
இதயகுமரன் அந்த மலரை வியப்புடன் நோக்கினான். “ பட்டரே ! அரசகுமாரி நந்தவனத்தில் இப்படிப் பல மலர்களிருக்கும். நான் வெளியூர்க்காரன். ஆண்டவன் அருளியதைத் திரும்பி கொடுக்க முடியாது.பதிலுக்கு இதை வைத்துக்கொள்ளுங்கள் “என்று ஒரு பொன் நாணயத்தைத்தட்டில் போட்டன்.
பட்டர் மலைத்தர். நடுங்கினர். “அப்பா இந்த பொற்காசைப்போல் இரண்டு தருகிறேன்.
மலரைக்கொடுத்து விடு” என்று கெஞ்சினார்.
இதயகுமரன் சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு மலரை இருமுறை கண்ணில் ஒற்றிக்கொண்டு பட்டர் காட்டிக்கொண்திருந்த தட்டில் வைத்துவிட்டுத் திரும்பினான் கர்ப்பகிரக வாயிற்படியை நோக்கி.
“அப்பா ! இந்த உன் பொன் நாணயம்“ என்று கூவியபடி பட்டர் அந்த நாணயத்தையும் கையில் எடுத்து காட்டினர்.

ஆனால் இதயகுமரன் அவரை திரும்பிப்பார்க்காமலும் அவர் சொன்னதை காதில் வாங்காமலும் வெளிய நடந்தான். அதுவரை கர்ப்பகிரகத்துக்கு அப்பால் வாயிலில் நின்றிருந்த விஜயனும் அவனை தொடர்ந்தது. அப்பெரும் கோயிலின் வாயிலுக்குக் கால்நடையாக வந்த இதயகுமரன், வாயிலை அடைந்தும் புரவிமீது ஏறிக்கொண்டு “அரண்மனைக்கு வழி எது? என்று வினவினான், பக்கத்திலிருந்த்வர்களை நோக்கி.

“அதோ அந்த சிறுகாட்டுக்கு அப்பலிருக்கிறது” என்று அங்கிருந்தொருவர் சுட்டிக்காட்ட, அந்தகாட்டுக்குள் புரவியைச் செலுத்திய வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டன். ஊருக்குள் இருந்த காடனாலும், காடுஉண்மையில் முழுக்காடாகவும் புதர்கள் நிறைந்ததாகவும் இருந்தது.சில புதர்களை சுற்றியும் சில புதர்களைத் தாண்டியும் சென்ற விஜயன் , ஏதோ ஒரு பாதைக்கு அருகில்வந்ததும்சட்டேன்று நின்றது? அப்படி திடிரெனப்புரவி நின்று விட்டதால் சிந்தனையிலிருந்து மீண்ட இதயகுமரன் எதிரேயிருந்த பாறையை நோக்கினான். பாறை ஒரளவு பெரிதாக இருந்ததன்றி அதை அடுத்து புதர் பார்ப்பதற்குப் பயங்கர மாயிருந்ததையும் கவனித்தான். இருப்பினும் அதைபற்றி லட்சியம் செய்யாமல் புரவியை மேற்கொண்டு நடத்த சேனத்தை தட்டினான்.

சேணம் பட்டமாத்திரத்தில் பாறக்கும் அந்தபுரவி இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.அதன் காரணத்தை அறியப்புரவியிலிருந்து குதித்த இதயகுமரன் செவிகளில் யாரோ பெருமுச்சு விடும் சத்தம் கேட்கவே அவன் சுற்றும் முற்றும் நோக்கினான். சத்தம் புதரிலிருந்து வருவதை உணர்ந்து அதற்கு அருகில் சென்று நோக்கினான். புதருக்குள் பெரும் நாகசர்ப்பம் ஒன்று பயங்கரமாக முச்சு விட்டு கொண்டிருப்பதை கண்ட இதயகுமரன் தனது இடைக்கச்சைஇலிருந்து குருவாளை எடுத்து கொண்டான்.மனித காலடி அரவம்கேட்ட காரணத்தாலோ என்னவோ நாகசர்ப்பம் பெரிதாக படமெடுத்தபடி அவனை நோக்கி சீறி வந்தது. அது படமெடுத்து ஊர்ந்த்துமே அதன் மீது குருவாளை வீசிவிட்ட இதயகுமரன், படத்தை ஊடுருவிய குருவளின் பிடியைப் பாம்புடன் எடுத்து இருமுறை சுழற்றி பாம்பை துரத்தில் வீசி எறிந்தான்.அத்துடன் ஆபத்து நீங்கி விட்டத்து என்று நினைப்பில் திரும்ப முயன்றவன் புதருக்குள்ளேயிருந்த புற்றில் ஏதோ ஒருதலை தெரிவதை கண்டுமீண்டும் புதர்க்கருகில் சென்றுதன் குருவாளாலால் புற்று மண்ணை கிளறி அகற்றினான். மண் அகல அகல ஒரு அழகிய சிலையின் மேற்பகுதி கன்னக்கு தெரியவே அதை பிடித்து ஆட்டிமேலே எடுத்தான். எடுத்தவன் சிலையென பிரமைபிடித்துப் பல வினாடிகள் நின்றுவிட்டன்.

அழகிய பெண்ணின் சிலை நாட்டிய பாணியில் நல்ல பழுப்பேறிய யானை தந்தத்தால் செய்யப்பட்டிருந்தது.அந்த சிலையின் வளைவுகளும் வேலைபாடுகளும் இதயகுமரன் உள்ளத்தை கொள்ளை கொண்டன.அந்த சிலைப் பெண் அவனுடன் தன் மூடிய கண்களாலே உறவாடினாள். அவள் இதழ்கள் கூட திறந்து எதோ பேசுவதைப் போன்ற பிரமையை விளைவித்தன சோழ நாட்டு வாலிபனுக்கு.

நேரம் போவது தெரியாமல் நின்று விட்டஅவனை “அதை இருந்த இடத்தில் வைத்து விடு” என்ற ஆணைக் குரல் சட்டென்று திரும்ப வைத்தது.
புதரிலிருந்து பத்தடி தூரத்தில் பைந்தொடி ஒருத்தி நின்ருந்தாள். அவள் கண்களில் சீற்றம் மித்மிஞ்சித் தெரிந்தது. அனால், கண்களை விடஅவள் தலைக்குழல் அவன் கவனத்தை பளிரேன ஈர்த்தது. அர்ச்சகர் தனக்கு அளிக்க மறுத்த செண்பக மலரை அவள் சூடியிருந்தாள்.
அதை கவனித்ததால் பிரமிப்புக்குள்ளன இதயகுமரனுக்கு அவள் விடுத்த அடுத்த ஆணை அதிக பிரமிப்பை அளித்தது. “இவனை சிறை செய்யுங்கள்” என்று அவள் தனக்கு பின்னால் நின்ற காவலருக்குஉத்தரவிட்டாள்.பத்து காவலர்கள் உருவிய வாட்களுடன் அவனை நோக்கி வந்தார்கள். அந்தப்பிசகை அவள் செய்திரவிட்டல் ஒரு பெரிய உண்மை புலப்பட்டிருக்கது.அந்த உண்மை புலப்பட்டிருக்காவிட்டால் தமிழகம் அதுவரை காணாத ஒரு பேரரசும் உருவாகி இருக்காது.