» தகரயெதுகை

ஆசிரியர் : மண்டல புருடர்.
௯௰௪)

மதலையே கொன்றை பிள்ளை மரக்கலங் கொடுங்கை தூணாம்
சிதலை நோய் துணிசொல்லென்ப சீதநீர்குளிரே மேகம்
பதலை யோர்கட்பறைப்பேர் பருவரை தாழிக்கும் பேர்
கதலியே வாழை தேற்றுக் காற்றாடி துவச நாற்பேர்

௯௰௫)

இதழ் பனையேடு பூவின் இத ழுதடென விம்முப்பேர்
கதழ்வு வேகங் சிறப்பாங் களி செருக்கொடு குழம்பு
மதுகமே யிருப்பை யொட்டி மதுரமாந் தராவுமாமே
சிதட னந்தகன் மூடன்பேர் திதி பக்க நிலை பேறும்பேர்

௯௰௬)

ஆத னாருயி ரோர் வில்லான் அங்கி யென்பது தீச் சட்டை
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர்
ஏதந் துன்பங் குற்றப் பேர் இமமே மயானங் காட்டம்
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை

௯௰௭)

சூத மாமரமே வண்டு சூதுட னிரதந் தோன்றல்
சூதகமே யாசௌசந் தோகைமார் தோயாப்பூப்பாம்
பூத மா லிறந்தகாலம் புனித மைம்பூதஞ் சீவன்
மாதவந் தவம் வசந்தம் வாதமே தருக்கங் காற்றாம்

௯௰௮)

மதன் வலி வேள் வனப்பாம் வலித்தலே வளைத்தல் பேசல்
பதங்கம் புட்பொது விட்டிற் பேர் பலி பூசை பிச்சை நீராம்
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப் பட்டதாமே
நிதம்பமே அல்கு லென்ப நெடுமலைப் பக்கமும்பேர்

௯௰௯)

சதி யுரோகணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து
விதியென்ப வினை யயன்பேர் வேட்டுவன் மகநாள் வேடன்
பதி யிறை கேள்வ னூராம் பதுக்கையே பாறை தூறு
பிதிர் கதை நொடி தூவற்பேர் பிண்டமே திரளை பிச்சை

௱)

ஆதியே முத னேரோடல் அருகன் மா லீசன் வேதன்
பூதியம் புவி யுடற்பேர் பொம்மலே பொலிவுஞ் சோறும்
பாதிரிப் பாடலப் பேர் பணைத்தெழு மூங்கிற்கும் பேர்
ஏதி யாயுதம் வாளென்ப இழை நூ லாபரண மாமே

௱௧)

சாதியே பிரம்பு கள் ளோர்தரு சிறுசண்பகப் பேர்
போத ஞானம் தோணிப்பேர் புகல் குதி ருடல் சொல் வெற்றி
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பாம்
ஓதிமம் அன்னம் வெற்பா முருத்தலே தோற்றல் கோபம்

௱௨)

சுதை மகள் கறவாத்தேனு சுண்ணச்சாந் தமுது நாற்பேர்
புதையென்ப கணையின் கட்டும் புதுமையும் மறைவு முப்பேர்
மதுவென்ப நறவுந் தேனும் வசந்தகாலமுமா மென்ப
கதை தண்டாயுதமே வார்த்தை காரணமிம் முப்பேரே

௱௩)

சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்றேவி
மேதை தோல் புத னிறைச்சி மிக்க பேரறிவு கள்ளாம்
கோதை முன்கைத் தோற் கட்டி குழறார் காற் றொழுங்கு சேரன்
ஓதை பேரொலி மதிற்பேர் உக்கந் தீ யிடை யா னேறு

௱௪)

அத்தர் பொன் பாதிகை கண்ணாடி சொற்பொருள் கா டோர்நாள்
புத்தகங் கோசமென்ப சித்திரப்படாமு மாமே
நத்தமே யிருளுமூரு நந்துட னிரவு நாற்பேர்
துத்த மோரிசை நாய் பாலே வயிறு கண் மருந்துஞ் சொல்லும்

௱௫)

அத்தென்ப அரைஞாண் செம்மை யசைச்சொலோ டிசைப்பு நாற்பேர்
கொத்துப் பூங்கொத்துத் தொண்டாந் தூம்பு வேய் துளை மரக்கால்
தத்தை மூத்தாள் கிளிக் காந்தழல் கிளிகடிகோல் செந்தீ
உத்தர மூழித்தீ மேலொடு மறுமொழி வடக்காம்

௱௬)

கூத்தனே யுயிர் நடன்பேர் குலங் குடி கோயில் கூட்டம்
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வியுறு பதனழிவு முப்பேர்
பாத்தென்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர்
தீர்த்தமே விழாவு நீருந் தீர்த்தனே யருக னாசான்

௱௭)

குத்தி மண் ணடக்க மென்ப கோணம் வாள் குதிரை மூக்காம்
பத்தியே முறை யொழுக்கம் பகர் வழிபாடு முப்பேர்
அத்தி யார்கலியே யானை யத வெலும் பாகநாற்பேர்
சத்தியஞ் சபத மெய்யாந் தபுதலே சாவுங் கேடும்

௱௮)

பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர் தலமுமாகும்
கத்திகை தொடை விகற்பந் துவசமே கமழ் வாசந்தி
உத்தி செந்திரு வுருப்புச் சுணங்கு ரையாடன் முப்பேர்
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர்பொறி புத லொன்றாமே

௱௯)

சித்தரபானு செந்தீ திவாகர னாண்டொன்றின் பேர்
பத்திர மிலை வனப்புப் படைநன்மை சிறகே பாணம்
சித்திர மழ கோர்பாடல் சிறந்த விம்மித மேரண்டம்
சத்திரங் குடையே யன்னசாலை கைவிடா வேல் வேள்வி

௱௧௰)

காத்திரங் கன மெய் சீற்றங் களிற்றின் முன்காலே கீரி
நேத்திரங்கண் பட்டாடை நீலியே கருமை துர்கை
கோத்திரம் புடவி தானே குலமொடு மலையுமாமே
பாத்தியே சிறுசெய் யில்லம் பகுத்தலும் வகுத்த நாமம்

௱௧௰௧)

சதமிலை யிறகு நூறு சத்தமே யோசை யோழம்
கதவமே கதவு காப்பாங் கழங்கு போய் நடங் கழற்சி
பதமூர லின்பஞ் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை
மதியோர் முன்னிலை யசைச் சொன் மாத மம்புலி புத்திப்பேர்

௱௧௰௨)

பீதகஞ் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலிப்பேர்
சாதகம் வானம் பாடி சனனம் பாரிட முப்பேரே
சேதகஞ் சேறு செம்மை தேயந்தா னுடம்பு நாடாம்
மாத ரோர்ரிடைச்சொல் காதல் வனப்பொடு மகளிராமே

௱௧௰௩)

சோதி மால ருகன் பானு சுடர்விளக் கீச னோர்நாள்
பூதியே நரகஞ் செல்வந் துர்கந்தம் புழுதி நீறாம்
வீதியே தெரு நேரோடல் மேலென்ப திடம் விண் மேற்காம்
மாதிரந் திசை யாகாயம் மலை யானை நில மைம்பேரே

௱௧௰௪)

தாது பொன்முதலா மேழும் சடமுறு தாதோரேழும்
பூதமோர் ரைந்துங் காவிக்கல்லுடன் புகலு நாற்பேர்
வேதிகை பலகை திண்ணை வெதிரேன்ப செவிடு வேணு
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை

௱௧௰௫)

கதுப்பே யாண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளு முப்பேர்
விதப்பே கம்பித மிக்காகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம்
அதிர் பொலி நடுக்கமென்ப அகப்பாவே புரிசை மேடை
ஒதுக்கமே நடை மறைப்பாம் ஒருத்த லாண்விலங்கு வேழம்

௱௧௰௬)

பத்திரி பறவை காளி பரி யிலை பாணமைம் பேர்
அத்தரி கழுதை விண் ணெட்டகம் பரி அசலம் அம்பாம்
சத்தியே யுமை வேல் கான்றல் குடை வலி துவசந் தானாம்
சுத்தியே யகல் வெண்சங்கஞ் சுத்த மோர் கருவிக்கும்பேர்

௱௧௰௭)

புத்தன்மாலருகன் சாத்தன் பூழில்தானகில் பூமிப்பேர்
புத்தேளே புதுமை தேவாம் பூட்கை தோல் மேற்கோள் யாளி
கைத்தல்துன்னங்கைத்தற்பேர் சாறு கள் விழவு தாறாம்
முத்தமே பிரியமோட்டம் மருதநன்னிலமுத்தாமே

௱௧௰௮)

அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவுந்நாற்பேர்
சித்தமே திட முள்ளப் பேர் சேகரந் தலை மா வேராம்
கைத்தலே சினங் கைப்பாகுங் கஞறலே பொலிவு கன்றல்
சித்தென்ப செயமே ஞானஞ் செய் யென்ப நில மேவற்பேர்

௱௧௰௯)

உத்திரஞ் சித்தரஞ்சேர்ந்தொளிருமில்லுறுப்போ டோர்நாள்
பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரலாகும்
மத்திகையே சம்மட்டி சுடர்நிலைதண்டு மாலை
மத்தென்ப தயிர்மத்தோடு மத்தமு மிருபேராமே

௱௨௰)

மதர்வு மேவுதல் வனப்பு வலி யிட மிகுதி யைம்பேர்
புதவென்ப கதவோர் புல்லாம் புணர்சியே கலவி கூடல்
சித ருறி திவலை வண்டு சீலையின்துணி நாற்பேரே
அதர் வழி புழுதி யாடடின்அதரு நுண்மணலு மாமே

௱௨௰௧)

முதலை செங்கிடை யிடங்கர் முருந்தென மெழியலாகும்
அத மிறங்குதல் பாதாங் கீழு மென்றைறுயு முப்பேர்
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியுங் காட்டும்
மத மிபமதஞ் செருக்காம் மாயையே மாயஞ் சத்தி

௱௨௰௨)

பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மைப் பேர்
பேதையோர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர்
வாதுவர் யானைப்பாகர் வயப்பரிமாவடிப் பேர்
மூதிரை யாதிரைப்பேர் முக்கணன் பேருமாமே

௱௨௰௩)

தாதியே பரணி நாளும் அடிமையும் யிருபேர்சாற்றும்
போதுதான் காலம் பூவாம் போர்வை தோல் கவச மீக்கோள்
சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இரியியல்பு பீடாம்
வீதலே கெடுதல் சாவே யிலம்பாடும் விளம்பு முப்பேர்