» லகரவெதுகை

ஆசிரியர் : மண்டல புருடர்.
௨௱௬)

புலவர் பாடுநரே கூத்தர் புத னும்பர் கவிகள் ஓவர்
வலவனே வெற்றியாளன் மருவுந் தேர்ப்பாகன் மாயோன்
அலகு நெற்கதிரே யாதி பலகரை நுளம்பு எண் ஏதி
அலரி கண்வரி யருக்கன் அழ கொருமரம் பூவாமே

௨௱௭)

ஆலமே வடவிருக்க மடுநஞ்சோ டலர்பூ நீராம்
மூலம் வேர் முதலே யேது முதிர்வுறுகிழங் கோர்நாளாம்
சீலமே குணந் தண்டித்தல் திகழ்சரித்திர முப்பேரே
சாலமே வலை சாலே கமராமரஞ் சபை மதிற் பேர்

௨௱௮)

காலம் வைகறை காலப்பேர் கல மலம் யாழ் பூ ணாவாய்
சாலகங் காலதர்ப்பேர் தானே பூமொட்டாகும்
தால முண்கலமே நாவே தராதரமே பனையே நாற்பேர்
ஆல லாடுதலொலிப்பேர் அறுவை சித்திரைநா ளாடை

௨௱௯)

இலம்பக மத்தியாய நுதற்சுட்டென் றிருபேராமே
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குண மகிழே யேரி
பலங் கனி பயன் காய் சேனை பலங் கிழங் கறுபேராகும்
அலங்க லென்பது பூமாலை அசைவொடு தளி ரிலங்கல்

௨௱௧௰)

ஒலி யென்ப திடியே காற்றே யோசை யென்றாகு முப்பேர்
ஒலியலே யாறுந் தோலும் உடுத்தவாடையும் பைந்தாரும்
கலுழியே கான்யாறென்ப கலங்கிய நீருமாமே
கலை மதிப்பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி

௨௱௧௰௧)

பீலயே யாலவட்டம் பெருவரை கலாபி தோகை
பாலிகை யுதடு வட்டம் படைவாளின்முட்டியும்பேர்
வேலி யூர் மதில் காவற்பேர் மெத்தை மெல்லணையே சட்டை
தோ லிபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை யைம்பேர்

௨௱௧௰௨)

பாலை யொர் மர நிலம் மந்நிலத்தினிலோர பாடலும்பேர்
வேலையே கடலதற்குமேவிய கரையே காலம்
மாலையே யிரவோடந்தி மாலிகை யொழுங்கு நாற்பேர்
சாலையே குதிரைப்பந்தி யறப்புறந் தானுமாமே

௨௱௧௰௩)

அல்லி வெள்ளாம்பல் காயா யகவித ழாகமுப்பேர்
அல் லிரா யிருளே யென்ப ஆக மார்பு டலுமாமே
சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீடென்ப
வல்லி யாய்ப்பாடி வல்லி வரைவொடு நிகளமாமே

௨௱௧௰௪)

இல் லிள்ளாள் இல்லையென்றல் இராசி சா விடம் வீ டாறே
மல் வளம் வலியினோடு மாயவனாடல் முப்பேர்
சில்லை யென்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர்
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோதாமே

௨௱௧௰௫)

வில்லென்ப மூலநாளாம் வெஞ்சிலை யொளியு மப்பேர்
வல் வலி விரைவு சூதா மலர்தலே யெதிர்தல் தோன்றல்
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை யனுஷநாளாம்
கொல்லென்ப தசைச்சொல் ஐயங் கொலையேவல் வருத்த நாற்பேர்

௨௱௧௰௬)

மால் புதன் பெருமை மேக மாயவன் மயக்கங் காற்றே
ஆலோ ட லிரண்டு சொல்லும் ஆமென்ப தல்லவும்பேர்
வால் வெண்மை மிகுதி தூய்மை வசந்தனே தென்றல் காமன்
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே

௨௱௧௰௭)

வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர்மர முப்பேரே
புலம் பொலி தனிமை யச்சம் பொய்யென்ப பொக்கம் பொந்தாம்
சலம் பொலி ஞெகிழி குன்றாஞ் செருந்தி பஞ்சரம் வாட்கோரை
விலங்கு காற்றளை குறுக்கு மிருகத்தின் பொதுவு மாமே

௨௱௧௰௮)

உலகமே திசை வெண் பூமி உயரிகுணஞ் சன முயர்ந்தோர்
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி
இலயமே கூத்துங் கூத்தின்விகற்பமு மிருபேரென்ப
வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்பு ளாடாம்

௨௱௧௰௯)

கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர்
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கந் தானாம்
சலாகை நன்மணி நாராசஞ் சவளமு மாகுமென்ப
விலோதம் பெண்மயிர் பதாகை விட மென்ப நஞ்சுந் தேளும்

௨௱௨௰)

செல் லிடி யேவல் மேகஞ் சிதலை யாகுமென்ப
எல் லொளி பக லிகழ்ச்சி இரவுட னிரவி யைம்பேர்
சொல் லுரை கீர்த்தி நெல்லாந் தொடுத்தலே வளைத்தல் கட்டல்
கல் லொலி மலை கல்லென்ப கரண்ட நீர்காக்கை செப்பாம்

௨௱௨௰௧)

கலி வஞ்ச மொலியே வாரி கடையுகம் வல யைம்பேரே
சிலை யொலி மலை கல் வில்லாஞ் செடியொளி செறிவு தீதாம்
தலமென்ப திலை புவிப்பேர் தலை யிடந் தலை விண் ணாதி
திலமே மஞ்சாடி யெள்ளாந் தலக மஞ்சாடி பொட்டாம்

௨௱௨௰௨)

வல்லை கான் விரைவு மைந் தாம் வட மணிவட மா றாம்பு
பல்ல மோர் கணக்கு பாணம் பல்லங் கரடி நாற்பேர்
மல்லலே வலி வளப் பேர் வாயி லைம்புலன் கடைப் பேர்
முல்லை மல்லிகையே வென்றி முல்லைநன்னிலங் கற்பாமே

௨௱௨௰௩)

கோலென்ப தீட்டி வாட்கோல் துகிலிகை துலாஞ் சம்மட்டி
சீலமன்னவன்றன்செங்கோல் திரட்சி யாழ்நரம்போ டம்பு
நீலவஞ்சனக்கோலோடு நீளிலந்தையும் பன்னோர்பேர்
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே

௨௱௨௰௪)

கூலமே பண்ணிகாரம் புனற்கரை கோ விலங்கின்
வாலோ டாவணமே பாகல் வரம்பொடு குரங் கெண்பேரே
கா லிட மரக்கால் பிள்ளை குறுந்தறி வனங் காம் பூற்றம்
காலங் குரங் கால் வாய்க்கால் காற்றுத் தேருருள் பன்மூன்றே

௨௱௨௰௫)

கோலமே யழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம்
மாலியே யிரவி கள்ளாம் மாந்தலே மரித் துண்டல்
வே லயில் படைக்கலப்பேர் வேதண்டங் கைலை வெற்பாம்
சாலி நெற்பொதுவுங் கள்ளு மருந்ததி தானுமாமே

௨௱௨௰௬)

உலவை கான் மரத்தின்கொம்பொடுறு தழை விலங்கின்கோடாம்
மலைதலே பொரல் சூடற்பேர் மந்திரி குபேரன் வெள்ளி
அலர் பழி விரிபூ நீராம் அவிர்தலே யொளி பீறற்பேர்
எலி பூரநா ளெலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம்

௨௱௨௰௭)

ஆலயங் நகரங் கோயில் யானையின்கூட முப்பேர்
பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரஞ் சுசி தருப்பை
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல்கவிப்புலவர்க்கும் பேர்
வேலாவலயந்தான் பூமி விரிகட லிருபேராமே

௨௱௨௰௮)

சூலியே கருப்பப் பெண்ணுந் துர்க்கைஞ் சிவனு முப்பேர்
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம்
பால் புடை யியல்பு திக்குப் பகுத்தல் பாலென்னு மைம்பேர்
ஏலமே மயிர்சாந்தோ டேலத்தின் பேருமாமே