» சொல்லணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௯௰௨)

எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருடரின் மடக்கெனும் பெயர்த்தே

௯௰௩)

அதுதான்,
ஓரடி முதலா நான்கடி காறும்
சேரு மென்ப தெளிந்திசி னோரே

௯௰௪)

ஆதி யிடைகடை யாதியோ டிடைகடை
இடையொடு கடைமுழு தெனவெழு வகைத்தே

௯௰௫)

ஓரடி யொழிந்தன தேருங் காலை
இணைமுதல் விகற்ப மேழு நான்கும்
அடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்

௯௰௬)

அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே

௯௰௭)

ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப