» புறநடை

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௱௨௰௬)

மெய்பெற விரித்த செய்யுட் டிறனு
மெய்திய நெறியு மீரைங் குணனும்
ஐயெழு வகையி னறிவுறு மணிய
மடியினுஞ் சொல்லினு மெழுத்தினு மியன்று
முடிய வந்த மூவகை மடக்கும்
கோமூத் திரிமுதற் குன்றா மரபி
னேமுற மொழிமிறைக் கவியீ ராறு
மிவ்வகை யியற்றுதல் குற்ற மிவ்வகை
யெய்த வியம்புத லியல்பென மொழிந்த
வைவகை முத்திறத் தாங்கவை யுளப்பட
மொழிந்த நெறியி னொழிந்தவுங் கோட
லான்ற காட்சிச் சான்றோர் கடனே