» உயிரீற்றுமுன் வல்லினம்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

இயல்பின் உம் விதியின் உம் நின்ற உயிர் முன்
க ச த ப மிகும் விதவாதன மன் ஏ 165
மர பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வர பெறுன உம் உள வேற்றுமை வழி ஏ 166
செய்யிய என்னும் வினையெச்சம் பல் வகை
பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபு ஏ
அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பு ஏ 167
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகல் உம் உரித்து அஃது ஏகின் உம் இயல்பு ஏ 168
சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதல் உம் விதி 169
பல சில எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின்
அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற 170
அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா 171
குறியதன் கீழ் ஆ குறுகல் உம் அதன் ஓடு
உகரம் ஏற்றல் உம் இயல்பு உம் ஆம் தூக்கின் 172
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு ஏ 173
உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழி ஏ
யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரின் ஏ 174
சுவை புளி முன் இன மென்மை உம் தோன்றும் 175
அல்வழி இ ஐ முன்னர் ஆயின்
இயல்பு உம் மிகல் உம் விகற்பம் உம் ஆகும் 176
ஆ முன் பகர ஈ அனைத்து உம் வர குறுகும்
மேலன அல்வழி இயல்பு ஆகும் ஏ 177
ப ஈ நீ மீ முன்னர் அல்வழி
இயல்பு ஆம் வலி மெலி மிகல் உம் ஆம் மீ கு ஏ 178
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம் 179
அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின் 180
வன் தொடர் அல்லன முன் மிகா அல்வழி 181
இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின்
மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை 182
நெடில் ஓடு உயிர் தொடர் குற்றுகரங்கள் உள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிக ஏ 183
மென் தொடர் மொழி உள் சில வேற்றுமை இல்
தம் இன வன் தொடர் ஆகா மன் ஏ 184
ஐ ஈற்று உடை குற்றுகரம் உம் உள ஏ 185
திசை ஒடு திசை உம் பிற உம் சேரின்
நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம்
றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற 186
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின் 187
எண் நிறை அளவு உம் பிற உம் எய்தின்
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர் 188
ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வரும் ஏ 189
மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது உம் ஆகும் 190
நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ 191
ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம் 192
எட்டன் உடம்பு ண ஆகும் என்ப 193
ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின்
முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு
தகரம் நிறீஇ பஃது அகற்றி ன ஐ
நிரல் ஏ ண ள ஆ திரிப்பது நெறி ஏ 194
முதல் இரு நான்கு ஆம் எண் முனர் பத்தின்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதி உம் ஏற்கும் என்ப 195
ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண் உம் அவை ஊர் பிற உம் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் த ஏ 196
ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி
எண் நிறை அளவு உம் பிற வரின் பத்தின்
ஈற்று உயிர்மெய் கெடுத்து இன் உம் இற்று உம்
ஏற்பது ஏற்கும் ஒன்பது உம் இனைத்து ஏ 197
இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப 198
ஒன்பது ஒழித்த எண் ஒன்பது உம் இரட்டின்
முன்னதின் முன் அல ஓட உயிர் வரின்
வ உம் மெய் வரின் வந்தது உம் மிகல் நெறி 199
பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும் 200
இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பு ஏ 201
வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி
ஈற்று அழிவு ஓடு உம் அம் ஏற்ப உம் உள ஏ 202
பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின்
ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம்
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை 203