» எழுத்தியல்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ 56
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம் புணர்பு என பன்னிரு பாற்று அது ஏ 57