» பிறப்பு

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

நிறை உயிர் முயற்சியின் உள் வளி துரப்ப
எழும் அணு திரள் உரம் கண்டம் உச்சி
மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய் வரல் பிறப்பு ஏ 74

அ வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்
மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை 75
அவற்று உள்
முயற்சி உள் அ ஆ அங்காப்பு உடைய 76
இ ஈ எ ஏ ஐ அங்காப்பு ஓடு
அண் பல் முதல் நா விளிம்பு உற வரும் ஏ 77
உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவு ஏ 78
க ங உம் ச ஞ உம் ட ண உம் முதல் இடை
நுனி நா அண்ணம் உற முறை வரும் ஏ 79
அண் பல் அடி நா முடி உற த ந வரும் 80
மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும் 81
அடி நா அடி அணம் உற ய தோன்றும் 82
அண்ணம் நுனி நா வருட ர ழ வரும் 83
அண் பல் முதல் உம் அண்ணம் உம் முறையின்
நா விளிம்பு வீங்கி ஒற்ற உம் வருட உம்
லகாரம் ளகாரம் ஆய் இரண்டு உம் பிறக்கும் 84
மேல் பல் இதழ் உற மேவிடும் வ ஏ 85
அண்ணம் நுனி நா நனி உறின் ற ன வரும் 86
ஆய்த கு இடம் தலை அங்கா முயற்சி
சார்பெழுத்து ஏன உம் தம் முதல் அனைய 87
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபு உம் தத்தமின் சிறிது உள ஆகும் 88
புள்ளி விட்டு அ ஒடு முன் உரு ஆகி உம்
ஏனை உயிர் ஓடு உருவு திரிந்து உம்
உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின்
பெயர் ஒடு உம் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய் 89
குறியதன் முன்னர் ஆய்த புள்ளி
உயிர் ஒடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து ஏ 90
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ 91
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ 92
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய 93
நெடில் ஓடு ஆய்தம் உயிர் வலி மெலி இடை
தொடர் மொழி இறுதி வன்மை ஊர் உகரம்
அஃகும் பிற மேல் தொடர உம் பெறும் ஏ 94
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் 95
ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் 96
ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும் 97

Advertisement