» பெயர்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின 62
அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல்
மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர் 63
அவற்று உள்
அ இ உ எ ஒ குறில் ஐந்து ஏ 64
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில் 65
அ இ உ முதல் தனி வரின் சுட்டு ஏ 66
எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம்
ஏ இரு வழி உம் வினா ஆகும் ஏ 67
வல்லினம் க ச ட த ப ற என ஆறு ஏ 68
மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறு ஏ 69
இடையினம் ய ர ல வ ழ ள என ஆறு ஏ 70
ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து
இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறை ஏ 71
தானம் முயற்சி அளவு பொருள் வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனம் ஏ 72