» போலி

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

மகர இறுதி அஃறிணை பெயரின்
னகரம் ஓடு உறழா நடப்பன உள ஏ 122
அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் 123
ஐகான் ய வழி ந ஒடு சில் வழி
ஞஃகான் உறழும் என்மர் உம் உளர் ஏ 124
அ முன் இகரம் யகரம் என்ற இவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அ ஓடு
உ உம் வ உம் ஔ ஓர் அன்ன 125
மெய்கள் அகரம் உம் நெட்டு உயிர் காரம் உம்
ஐ ஔ கான் உம் இருமை குறில் இவ்
இரண்டு ஒடு கரம் உம் ஆம் சாரியை பெறும் பிற 126
மொழி ஆய் தொடரின் உம் முன் அனைத்து எழுத்து ஏ 127