» மாத்திரை

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

மூன்று உயிரளபு இரண்டு ஆம் நெடில் ஒன்று ஏ
குறில் ஓடு ஐ ஔ குறுக்கம் ஒற்றளபு
அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம்
கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை 99
இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை 100
ஆவி உம் ஒற்று உம் அளவு இறந்து இசைத்தல் உம்
மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின் 101