» பகுதி

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

தத்தம்
பகாப்பதங்கள் ஏ பகுதி ஆகும் 134
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ 135
ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனைய உம் பண்பின் கு இயல்பு ஏ 136
நட வா மடி சீ விடு கூ வே வை
நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின்
தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று
எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்ற உம்
செய் என் ஏவல் வினை பகாப்பதம் ஏ 137
செய் என் வினை வழி வி பி தனி வரின்
செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல் 138
விளம்பிய பகுதி வேறு ஆதல் உம் விதி ஏ 139

Advertisement