» பதம்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

எழுத்து ஏ தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின்
பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப 128
உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம்
க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டு ஓடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின 129
பகாப்பதம் ஏழு உம் பகுபதம் ஒன்பது உம்
எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப 130
பகுப்பு ஆல் பயன் அற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற
பெயர் வினை இடை உரி நான்கு உம் பகாப்பதம் 131
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதம் ஏ 132
பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறின் உம் ஏற்பவை
முன்னி புணர்ப்ப முடியும் எ பதங்கள் உம் 133

Advertisement