» வடமொழி ஆக்கம்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

இடை இல் நான்கு உம் ஈற்று இல் இரண்டு உம்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு
ய ஆதி நான்மை ள ஆகும் ஐ ஐம்
பொது எழுத்து ஒழிந்த நால் ஏழு உம் திரியும் 146
அவற்று உள்
ஏழ் ஆம் உயிர் இ உம் இரு உம் ஐ வருக்கத்து
இடையின் மூன்று உம் அ அ முதல் உம்
எட்டு ஏ ய உம் முப்பது ச ய உம்
மேல் ஒன்று ச ட உம் இரண்டு ச த உம்
மூன்று ஏ அ க உம் ஐந்து இரு க உம்
ஆ ஈறு ஐ உம் ஈ ஈறு இகரம் உம் 147
ரவ்வின் கு அ முதல் ஆம் மு குறில் உம்
லவ்வின் கு இ முதல் இரண்டு உம் யவ்வின் கு
இ உம் மொழி முதல் ஆகி முன் வரும் ஏ 148
இணைந்து இயல் காலை ய ர ல கு இகரம் உம்
ம வ கு உகரம் உம் நகர கு அகரம் உம்
மிசை வரும் ர வழி உ உம் ஆம் பிற 149
ற ன ழ எ ஒ உம் உயிர்மெய் உம் உயிரளபு
அல்லா சார்பு உம் தமிழ் பிற பொது ஏ 150

Advertisement