» உரியியல்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

பல் வகை பண்பு உம் பகர் பெயர் ஆகி
ஒரு குணம் பல குணம் தழுவி பெயர் வினை
ஒருவா செய்யுள் கு உரியன உரிச்சொல் 442
உயிர் உயிர் அல்லது ஆம் பொருள் குணம் பண்பு ஏ 443
ஒன்று முதல் ஆ கீழ் கொண்டு மேல் உணர்தலின்
ஓர் அறிவு ஆதி ஆ உயிர் ஐந்து ஆகும் 444
புல் மரம் முதல உற்று அறியும் ஓர் அறிவு உயிர் 445
முரள் நந்து ஆதி நா அறிவு ஒடு ஈர் அறிவு உயிர் 446
சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர் 447
தும்பி வண்டு ஆதி கண் அறிவின் நால் அறிவு உயிர் 448
வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதி செவி அறிவு ஓடு ஐ அறிவு உயிர் ஏ 449
உணர்வு இயல் ஆம் உயிர் ஒன்று உம் ஒழித்த
உடல் முதல் அனைத்து உம் உயிர் அல் பொருள் ஏ 450
ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றின் உம்
வேற்றுமை நயத்தின் வேறு ஏ உடல் உயிர் 451
அறிவு அருள் ஆசை அச்சம் மானம்
நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி
துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்
மறவி இனைய உடல் கொள் உயிர் குணம் 452
துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர் தொழில் குணம் 453
பல் வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம்
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள் குணம் 454
தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம் 455
சால உறு தவ நனி கூர் கழி மிகல் 456
கடி என் கிளவி காப்பு ஏ கூர்மை
விரை ஏ விளக்கம் அச்சம் சிறப்பு ஏ
விரைவு ஏ மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவு ஏ மன்றல் கரிப்பின் ஆகும் 457
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை
பாட்டு பகர்ச்சி இயம்பல் சொல் ஏ 458
முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை
கனை சிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்பு ஓடு இன்னன ஓசை 459
இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்று இசை நூல் உள் குண குணிப்பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதல் ஆ
நல்லோர் உரிச்சொல் இல் நயந்தனர் கொளல் ஏ 460
சொல் தொறு உம் இற்று இதன் பெற்றி என்று அனைத்து உம்
முற்ற மொழிகுறின் முடிவு இல ஆதலின்
சொற்றவற்று இயல் ஆன் மற்றைய பிற உம்
தெற்று என உணர்தல் தெள்ளியோர் திறன் ஏ 461
பழையன கழிதல் உம் புதியன புகுதல் உம்
வழு அல கால வகையின் ஆன் ஏ 462