» பெயரியல்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

மு சகம் நிழற்றும் முழு மதி மு குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல் ஏ 258
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இரு திணை ஐம் பால் பொருள் ஐ உம் தன் ஐ உம்
மூ வகை இடத்து உம் வழக்கு ஒடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல் ஏ 259
ஒருமொழி ஒரு பொருளன ஆம் தொடர்மொழி
பல பொருளன பொது இருமை உம் ஏற்பன 260
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ள உம் இல்ல உம் அஃறிணை 261
ஆண் பெண் பலர் என மு பாற்று உயர்திணை 262
ஒன்று ஏ பல என்று இரு பாற்று அஃறிணை 263
பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமை உம் அஃறிணை அன்ன உம் ஆகும் 264
படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணை பால் அனைத்து உம் ஏனை
இடத்து அவற்று ஒருமை பன்மை பால் ஏ 265
தன்மை முன்னிலை படர்க்கை மூ இடன் ஏ 266
இலக்கணம் உடையது இலக்கணப்போலி
மரூஉ என்று ஆகும் மூ வகை இயல்பு உம்
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும் மு தகுதி ஓடு ஆறு ஆம் வழக்கு இயல் 267
பல் வகை தாதுவின் உயிர் கு உடல் போல் பல
சொல் ஆல் பொருள் கு இடன் ஆக உணர்வின் இன்
வல்லோர் அணி பெற செய்வன செய்யுள் 268
ஒன்று ஒழி பொது சொல் விகாரம் தகுதி
ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பு ஏ
முதல் தொகை குறிப்பு ஓடு இன்ன பிற உம்
குறிப்பின் தரு மொழி அல்லன வௌிப்படை 269

Advertisement