» சொற்பாகுபாடு

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

அது ஏ
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்கு உம் ஆம் திசை வடசொல் அணுகா வழி 270
செந்தமிழ் ஆகி திரியாது யார் கு உம்
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் 271
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகி உம்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகி உம்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும் 272
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தின் உம்
ஒன்பதிற்று இரண்டின் இல் தமிழ் ஒழி நிலத்தின் உம்
தம் குறிப்பின ஏ திசைச்சொல் என்ப 273
பொது எழுத்து ஆன் உம் சிறப்பு எழுத்து ஆன் உம்
ஈர் எழுத்து ஆன் உம் இயைவன வடசொல் 274

Advertisement