» வழாநிலை வழுவமைதி

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

திணை ஏ பால் இடம் பொழுது வினா இறை
மரபு ஆம் ஏழ் உம் மயங்கின் ஆம் வழு ஏ 375
ஐயம் திணை பால் அ அ பொதுவின் உம்
மெய் தெரி பொருள் மேல் அன்மை உம் விளம்புப 376
உயர்திணை தொடர்ந்த பொருள் முதல் ஆறு உம்
அதன் ஒடு சார்த்தின் அ திணை முடிபின 377
திணை பால் பொருள் பல விரவின சிறப்பின் உம்
மிகவின் உம் இழிபின் உம் ஒரு முடிபின ஏ 378
உவப்பின் உம் உயர்வின் உம் சிறப்பின் உம் செறலின் உம்
இழிப்பின் உம் பால் திணை இழுக்கின் உம் இயல்பு ஏ 379
ஒருமையின் பன்மை உம் பன்மையின் ஒருமை உம்
ஓர் இடம் பிற இடம் தழுவல் உம் உள ஏ 380
தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை
எழுவாய் இரண்டு உம் எஞ்சிய ஏற்கும் 381
இறப்பு எதிர்வு நிகழ்வு என காலம் மூன்று ஏ 382
மு காலத்தின் உம் ஒத்து இயல் பொருள் ஐ
செப்புவர் நிகழும் காலத்து ஆன் ஏ 383
விரைவின் உம் மிகவின் உம் தௌிவின் உம் இயல்பின் உம்
பிறழ உம் பெறூஉம் மு காலம் உம் ஏற்புழி 384
அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறு உம் இழுக்கார் 385
சுட்டு மறை நேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும் எண் இறை உள் இறுதி
நிலவிய ஐந்து உம் அ பொருண்மையின் நேர்ப 386
வினாவின் உம் செப்பின் உம் விரவா சினை முதல் 387
எ பொருள் எ சொலின் எ ஆறு உயர்ந்தோர்
செப்பினர் அ படி செப்புதல் மரபு ஏ 388
வேறு வினை பல் பொருள் தழுவிய பொது சொல் உம்
வேறு அவற்று எண் உம் ஓர் பொது வினை வேண்டும் 389
வினை சார்பு இனம் இடம் மேவி விளங்கா
பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்து ஏ 390
எழுத்து இயல் திரியா பொருள் திரி புணர்மொழி
இசை திரிபு ஆல் தௌிவு எய்தும் என்ப 391
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி
ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோ வழி 392
திணை நிலம் சாதி குடி ஏ உடைமை
குணம் தொழில் கல்வி சிறப்பு ஆம் பெயர் ஓடு
இயற்பெயர் ஏற்றிடின் பின் வரல் சிறப்பு ஏ 393
படர்க்கை மு பெயர் ஓடு அணையின் சுட்டு
பெயர் பின் வரும் வினை எனின் பெயர் கு எங்கு உம்
மருவும் வழக்கு இடை செய்யுள் கு ஏற்புழி 394
அசைநிலை பொருள்நிலை இசைநிறை கு ஒரு சொல்
இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் 395
இரட்டைக்கிளவி இரட்டு இன் பிரிந்து இசையா 396
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார் 397

ஒருபொருட்பன்மொழி சிறப்பின் இன் வழா 398
இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள்
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும் 399
செயப்படுபொருள் ஐ செய்தது போல
தொழிற்பட கிளத்தல் உம் வழக்கின் உள் உரித்து ஏ 400
பொருள் முதல் ஆறு ஆம் அடை சேர் மொழி இனம்
உள்ள உம் இல்ல உம் ஆம் இரு வழக்கின் உம் 401
அடை மொழி இனம் அல்லது உம் தரும் ஆண்டு உறின் 402
அடை சினை முதல் முறை அடைதல் உம் ஈர் அடை
முதல் ஓடு ஆதல் உம் வழக்கு இயல் ஈர் அடை
சினை ஒடு செறிதல் உம் மயங்கல் உம் செய்யுள் கு ஏ 403
இயற்கை பொருள் ஐ இற்று என கிளத்தல் 404
காரணம் முதல் ஆ ஆக்கம் பெற்று உம்
காரணம் இன்றி ஆக்கம் பெற்று உம்
ஆக்கம் இன்றி காரணம் அடுத்து உம்
இருமை உம் இன்றி உம் இயலும் செயும் பொருள் 405
தம் பால் இல்லது இல் எனின் இனன் ஆய்
உள்ளது கூறி மாற்றி உம் உள்ளது
சுட்டி உம் உரைப்பர் சொல் சுருங்குதல் கு ஏ 406
ஈ தா கொடு எனும் மூன்று உம் முறை ஏ
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை 407
முன்னத்தின் உணரும் கிளவி உம் உள ஏ 408
கேட்குந போல உம் கிளக்குந போல உம்
இயங்குந போல உம் இயற்றுந போல உம்
அஃறிணை மருங்கின் உம் அறையப்படும் ஏ 409
உருவக உவமை இல் திணை சினை முதல்கள்
பிறழ்தல் உம் பிற உம் பேணினர் கொளல் ஏ 410