Advertisement

» வினைச்சொல்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய் பொருள் ஆறு உம் தருவது வினை ஏ 320
பொருள் முதல் ஆறின் உம் தோற்றி முன் ஆறன் உள்
வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பு ஏ 321
அவை தாம்
முற்று உம் பெயர் வினை எச்சம் உம் ஆகி
ஒன்றன் கு உரிய உம் பொது உம் ஆகும் 322