» சிறப்புப் பாயிரத்திலக்கணம்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

ஆக்கியோன் பெயர் ஏ வழி ஏ எல்லை
நூல் பெயர் யாப்பு ஏ நுதலிய பொருள் ஏ
கேட்போர் பயன் ஓடு ஆய் எண் பொருள் உம்
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பு ஏ 47
காலம் களன் ஏ காரணம் என்று இ
மூ வகை ஏற்றி மொழிநர் உம் உளர் ஏ 48

முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தின் உம்
இடுகுறி ஆன் உம் நூல் கு எய்தும் பெயர் ஏ 49
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
என தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப 50

தன் ஆசிரியன் தன் ஒடு கற்றோன்
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்ற
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடன் ஏ 51
தோன்றா தோற்றி துறை பல முடிப்பின் உம்
தான் தன் புகழ்தல் தகுதி அன்று ஏ 52

மன் உடை மன்றத்து ஓலைத்தூக்கின் உம்
தன் உடை ஆற்றல் உணரார் இடையின் உம்
மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதின் உம்
தன் ஐ மறுதலை பழித்த காலை உம்
தன் ஐ புகழ்தல் உம் தகும் புலவோன் கு ஏ 53
ஆயிரம் முகத்து ஆன் அகன்றது ஆயின் உம்
பாயிரம் இல்லது பனுவல் அன்று ஏ 54

மாட கு சித்திரம் உம் மா நகர் கு கோபுரம் உம்
ஆடு அமை தோள் நல்லார் கு அணி உம் போல் - நாடி முன்
ஐது உரையாநின்ற அணிந்துரை ஐ எ நூல் கு உம்
பெய்து உரையா வைத்தார் பெரிது 55

Advertisement