» நூலினது வரலாறு

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

நூலின் இயல்பு ஏ நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்று ஆய்
நால் பொருள் பயத்து ஓடு எழு மதம் தழுவி
ஐ இரு குற்றம் உம் அகற்றி அ மாட்சி ஓடு
எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்
என்னும் உறுப்பின் இல் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறும் ஏ 4
முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் 5
அவற்று உள்
வினை இன் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் 6
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும் 7
இருவர் நூல் கு உம் ஒரு சிறை தொடங்கி
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும் 8
முன்னோர் மொழி பொருள் ஏ அன்றி அவர் மொழி உம்
பொன் ஏ போல் போற்றுவம் என்பதன் உம் - முன்னோர் இன்
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதன் கு உம்
கூறு பழம் சூத்திரத்தின் கோள் 9
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயன் ஏ 10
எழு வகை மதம் ஏ உடன்படல் மறுத்தல்
பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவு ஏ
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பு ஏ
இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவு ஏ
பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை
பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் ஏ 11

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈர் ஐம் குற்றம் நூல் கு ஏ 12
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்து ஆதல்
முறையின் வைப்பு ஏ உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலின் கு அழகு எனும் பத்து ஏ 13

நுதலிப் புகுதல் ஓத்து முறை வைப்பு ஏ
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவு இடம் கூறல்
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொல் பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல் (5)
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல் (10)

உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒரு தலை துணிதல் எடுத்துக்காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் (15)
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்
தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப் பொருள் முடித்தல்
ஒன்று இனம் முடித்தல் தன் இனம் முடித்தல்
உய்த்துணர வைப்பு என உத்தி எண் நான்கு ஏ (20) 14
நூல் பொருள் வழக்கு ஒடு வாய்ப்ப காட்டி
ஏற்புழி அறிந்து இதன் கு இ வகை ஆம் என
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி 15
நேர் இன மணி ஐ நிரல்பட வைத்தாங்கு
ஓர் இன பொருள் ஐ ஒரு வழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் 16
ஒரு நெறி இன்றி விரவிய பொருள் ஆல்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் 17
சில் வகை எழுத்து இல் பல் வகை பொருள் ஐ
செவ்வன் ஆடி இன் செறித்து இனிது விளக்கி
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம் 18
ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை 19
பிண்டம் தொகை வகை குறி ஏ செய்கை
கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம் 20
பாடம் கருத்து ஏ சொல் வகை சொல் பொருள்
தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயன் ஓடு
ஆசிரியவசனம் என்ற ஈர் ஏழ் உரை ஏ 21
கருத்து பதப்பொருள் காட்டு மூன்றின் உம்
அவற்று ஒடு வினா விடை ஆக்கல் ஆன் உம்
சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை 22
சூத்திரத்து உள் பொருள் அன்றி உம் ஆண்டை கு
இன்றி அமையா யாவை உம் விளங்க
தன் உரை ஆன் உம் பிற நூல் ஆன் உம்
ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பு ஒடு
மெய்யின் ஐ எஞ்சாது இசைப்பது விருத்தி 23
பஞ்சி தன் சொல் ஆ பனுவல் இழை ஆக
செம் சொல் புலவன் ஏ சேயிழை ஆ - எஞ்சாத
கை ஏ வாய் ஆக கதிர் ஏ மதி ஆக
மை இலா நூல் முடியும் ஆறு 24
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கி பொல்லா - மரத்தின்
கன கோட்டம் தீர்க்கும் நூல் அஃது ஏ போல் மாந்தர்
மன கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு 25

Advertisement