» அறிவின்மை

௨௱௫௰௧)

நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்

௨௱௫௰௨)

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து

௨௱௫௰௩)

கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்

௨௱௫௰௪)

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ஡஢டைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று

௨௱௫௰௫)

புல்லாப்புன் கோட்டிப் புலவ ஡஢டைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து

௨௱௫௰௬)

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி

௨௱௫௰௭)

பன்றிக்கூழ்ப் பத்தா஢ல் தேமா வடித்தற்றால்
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு

௨௱௫௰௮)

பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று
கோலால் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு

௨௱௫௰௯)

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறு஡உம் ஈப்போல், - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு

௨௱௬௰)

கற்றா ருரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால் - மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.