» இன்மை

௨௱௮௰௧)

அத்திட்ட கூறை அரைச்சுற்ற வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்தின் கடை

௨௱௮௰௨)

நீ஡஢னும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம் - தோ஢ன்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கா஢ய பூழை நுழைந்து

௨௱௮௰௩)

கல்லோங் குயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம் - கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக நாட
இலாஅஅர்க் கில்லை தமர்

௨௱௮௰௪)

உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டரா யிரவர் தொகுபவே - வண்டாய்த்
தி஡஢தரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இல்வுலகத் தில்

௨௱௮௰௫)

பிறந்த குலமாயும் பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேல் க்ழுஉங் கணமலை நன்னாட
இன்மை தழுவப்பட் டார்க்கு

௨௱௮௰௬)

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூ ஡஢ருந்துமோன் றாற்றாதான் - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று

௨௱௮௰௭)

நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர் - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய். நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்

௨௱௮௰௮)

இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று

௨௱௮௰௯)

கடகம் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்

௨௱௯௰)

ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட
வாழாதார்க் கில்லை தமர்