» கீழ்மை

௩௱௪௰௧)

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல் - மிக்க
கனம்பொதிந்த நு஡ல்வி஡஢த்துக் காட்டினும் கீழ்தன்
மனம்பு஡஢ந்த வாறே மிகும்

௩௱௪௰௨)

காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான்
உறங்குவாம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து

௩௱௪௰௩)

பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர் - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட
வற்றாம் ஒருநடை கீழ்

௩௱௪௰௪)

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பளையனைத்
தென்றும் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு

௩௱௪௰௫)

பொற்கலத் து஡ட்டிப் புறந்தா஢னும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்

௩௱௪௰௬)

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல் - எக்காலும்
முந்தி஡஢மேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்

௩௱௪௰௭)

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலால் காணப் படும்

௩௱௪௰௮)

கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்

௩௱௪௰௯)

பழைய ஡஢வரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினிய ராகுவர் சான்றோர் - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப
எள்ளுவர் கீழா யவர்

௩௱௫௰)

கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்