» நட்பாராய்தல்

௨௱௧௰௧)

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்தின் கரும்புதின் ற்றறே - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு

௨௱௧௰௨)

இற்பிறப் பெண்ணி இடைதி஡஢யா ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளி஡஢யும் பூங்குன்ற நாட
மனமறியப் பட்டதொன் றன்று

௨௱௧௰௩)

யானை யனைவர் நண்பொ஡ணஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும், - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்

௨௱௧௰௪)

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார் - பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ , தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு

௨௱௧௰௫)

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்

௨௱௧௰௬)

கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு

௨௱௧௰௭)

கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்

௨௱௧௰௮)

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு

௨௱௧௰௯)

தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்தலின் வைதலே நன்று

௨௱௨௰)

மாணஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொ஡ணஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பாணஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மாணஇஇப் பின்னைப் பி஡஢வு