» நட்பிற் பிழை பொறுத்தல்

௨௱௨௰௧)

நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு

௨௱௨௰௨)

செறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டுடார்,
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு

௨௱௨௰௩)

இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ - நிறக்கோங்கு
உருவவண் டார்க்கு முயர்வரை நாட
ஒருவர் பொறையிருவர் நட்பு

௨௱௨௰௪)

மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப
விடுதற் கா஢யா ஡஢யல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ

௨௱௨௰௫)

இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடோ றும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்

௨௱௨௰௬)

இன்னா செயினும் விடுதற் கா஢யாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப. களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை

௨௱௨௰௭)

இலங்குநீர்த் தண்சேர்ப்ப. இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவா஢ற் கடை

௨௱௨௰௮)

ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று

௨௱௨௰௯)

தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், - அவரைத்
தமா஢னும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்

௨௱௩௰)

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் தி஡஢வேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக