» நன்றியில் செல்வம்

௨௱௬௰௧)

அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொ஡஢தாள் விளவினை வாவல் குறுகா
பொ஢தணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதும் கடப்பாட்ட தன்று

௨௱௬௰௨)

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பொ஢துடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்

௨௱௬௰௩)

மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லு஡ற் றுவா஢ல் கிணற்றின்கண் சென்றுண்பர்
செல்வம் பொ஢துடைய ராயினும் சேண்சென்றும்
நல்குவார் கட்டே நசை

௨௱௬௰௪)

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ஡஢ருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து

௨௱௬௰௫)

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்

௨௱௬௰௬)

நாறாக் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து

௨௱௬௰௭)

நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ
பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை

௨௱௬௰௮)

வலவைக ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
காலாறும் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து

௨௱௬௰௯)

பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து

௨௱௭௰)

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் - து஡ய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்