» இடைச்சொல் மரபு

௫௰)

சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி
னேரும் பொருளாத னின்றசையாய்ப் - பேர்தல்
வினைச்சொற்கு ஈறாதல் இசைநிறைத்து மேவல்
அனைத்தே இடைச்சொ லளவு

௫௰௧)

தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண்
ணரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை
தேற்றம் வின்வெண் ணெதிர்மறையுந் தேமொழியாய்
ஈற்றசையும் ஏகார மென்

௫௰௨)

காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன்
னாண்டறிகா லம்பெருமை யச்சமே - நீண்ட
பயநின்மை தில்லை பருவம் விழைவு
நயனில் ஒழியிசைபு நாட்டு

௫௰௩)

வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
எனவென் றிரண்டு மியலும் - நினையுங்கான்
மன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம்
என்றா எனாவிரண்டு மெண்

௫௰௪)

சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும்
உருப்பி னெதிர்மறையி னோடும் - வெறுத்த
வொழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா
வொழிபொருளுஞ் சார்த்தி யுணர்

Advertisement